தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் – விபரம் இதோ!

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த நபர்களை அடையாளம் கண்டால் 071 8591771, 0112422176 மற்றும் 011 2395605 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மொஹமட் இயுஹைம் சாஹிட் அப்துல்லாஹ், நோத் சார எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாத்திமா காதியா, மொஹமட் மொஹட் ரில்வான் மற்றும் பாதிமா லதீபா உள்ளிட்ட ஆறு பேரின் புகைப்படங்களையே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு வெளியிட்டுள்ளது.

இதில் மூன்று பெண்களும், மூன்று ஆண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.