vijay_goodhuman003

இளைய தளபதி விஜய் யை பற்றி பல விஷயங்கள் நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். மிக எளிமையானவர் , நேர்மையானவர் என எல்லாரும் சொல்வார்கள்.

சமீபத்தில் சிந்திய விஸ்வா என்ற ஒரு பெண் விஜய் சந்தித்த தருணம், நிகழ்வான அனுபவம் பற்றி தனது முகபுத்தகத்தில் பகிர்ந்துள்ளார். முதலில் நான் விஜய் ரசிகை இல்லை , ஆனால் எனது கணவர் விஜய்யின் தீவிர ரசிகர் , அவருக்காக ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று நண்பரின் உதவியோடு விஜய் யை சந்திக்க ஏற்பாடு செய்தார். நாங்கள் முதலில் அவர் இருக்கும் பிஸியில் கிடைக்காது என்று நினைத்தோம்.

ஆனால் வர சொல்லுங்கள் என்ற தகவல் வர எங்க எல்லாருக்கும் ஆச்சரியம். உடனே எனது நண்பர், எனது கணவர் மற்றும் குழந்தையுடன் விஜய் பார்க்க சென்றோம் . சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒருவர், சிறிது கூட கர்வமின்றி எங்களை இன்முகத்துடன் வரவேற்று எங்களுடன் அன்பாக பேசினார்.

 

மேலும் எனது மகனை கையில் தூக்கி அவனுடன் விளையாடினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது விஜய்க்கு ஏன் இவ்வளவு தீவிரமான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது. விஜய் ஒரு அபாரமான பெர்சனாலிட்டி உள்ளவர் என்பதும் மனித நேயமுள்ள ஒரு மனிதர் என்பது எங்களுக்கு அன்றையை தினம் புரிய வந்தது. விஜய்யுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த எனது நண்பருக்கு மிகப்பெரிய நன்றி’ என்று சிந்தியா வாசு என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் தனது மகிழ்வை பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.