இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன – பலத்த சோதனை.

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகதி மேலும் இரு தடவைகள் மாற்றம் செய்யப்பட்டது.

தொடரந்து தரம் 6ற்கு மேல் உள்ள வகுப்புக்களை இன்று ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை கல்வி அமைச்சும், பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து மெற்கொண்டனர்.

இதற்காக நேற்று மாலை வரை பாடசாலைகள் அனைத்தும் படைத்தரப்பினரால் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைக்க வருகைதரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் அனைவரும் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதேவேளை மாணவர்கள் தமது கற்றலிற்காக எடுத்து வரப்பட்ட பைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்களை எடுத்து வரும் காட்சிகள் எமது கமெராக்களில் இவ்வாறு பதிவாகின.

இதேவேளை பொலிசார், படையினர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகம், பெற்றோர் என பலரும் குறித்த சோதனை நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

இதேவேளை தரம் ஒன்று முதல், ஐந்து வரையான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.