கேரளாவில் இலங்கையர் கைது!

30 வயதான இலங்கையர் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரிய பயண ஆவணங்களை சமர்ப்பிக்காமையை அடுத்தே அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

தம்பனூர் பேருந்து நிலையத்தில் நின்றபோது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரை விசாரித்துள்ளனர்.

இதன்போது தம்மை மலுகே ஜூத் செல்பொன் டயஸ் என்று குறித்த இலங்கையர் அடையாளப்படுத்தியுள்ளார்.

தமது கடவுச்சீட்டு உட்பட்ட ஆவணங்கள். கைப்பையில் இருந்து திருடுபோய் விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்தியாவுக்கு வந்த காரணத்தை இன்னும் அவர் கூறவில்லை.

இதனையடுத்து, அவர், தமிழகம், நாகர்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.