தீவிரவாதிகளுக்கு உதவிய நீதிபதி!

தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நீதிபதிக்கு தொடர்பு இருப்பதாக மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச சபை மற்றும் பொது மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த குழுவினரின் செயற்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க கிழக்கு மாகாணம், வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த நீதிபதியொருவர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதற்கான தகவல் மற்றும் ஆவணங்கள் ஆளுனருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக ஜனாதிபதியிடம் ஆவண மூலமான முறைப்பாடொன்றை வழங்கப் போவதாகவும் ஆளுனர் அசாத் சாலி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் கருத்திற்கு நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலாத்த அத்துகோரல கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.