அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நளினி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரியே குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.