வதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம்!

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்காக கடுமையாக செயலாற்றி வருகின்றோம். ஆனால் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சாந்த கோட்டேகொட இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளும் பொறுப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சிலர் வெறும் வார்த்தைகளால், நாட்டில் பாதுகாப்பு இல்லையென வதந்திகளை பரப்பி மக்களிடத்தில் அச்சத்திளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய செயற்பாட்டினால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்குக்கூட பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

ஆகையால் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதனை யாராக இருப்பினும் உடனடியாக தவிர்த்துகொள்ள வேண்டும்” என சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.