பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

7.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் மையம்கொண்டிருந்த பகுதியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில், சுமார் 100,000 பேர் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.