பயங்கரவாதி சஹ்ரானுக்கு நிதி வழங்கிய மத்திய கிழக்கு நாடுகள்!

மத்திய கிழக்கைச் சேர்ந்த இரண்டு நாடுகள் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஹ்ரான் ஹாசீம் மத்திய கிழக்கின் முக்கிய நாடு ஒன்றின் ஊடாக துருக்கி சென்று அங்கிருந்து சில தடவைகள் சிரியாவிற்கு சென்றுள்ளார்.

2017ம் ஆண்டில் சஹ்ரானுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேவேளை, சஹ்ரானின் காத்தான்குடியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலை நிர்மானிப்பதற்கும் மத்திய கிழக்கைச் சேர்ந்த முக்கிய நாடு ஒன்றே நிதி உதவி வழங்கியுள்ளது.