சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் பயணம்!

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகத்திலிருந்து பயணமானது.

இதில் கடற்படை அதிகாரிகள் 17 பேர் உள்ளடங்கலாக 154 பேருடன் கடற்படையினர் சென்றுள்ளனர்.

33 நாடுகளின் கடற்படை பங்குபற்றவுள்ள சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி இம்மாதம் 12 திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

17 ஆம் திகதி சமுத்ரா கப்பல் மீண்டும் நாட்டுக்கு திரும்பும் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.