நாடாளுமன்ற விவாதங்களில் ஜனாதிபதி பங்கேற்க வேண்டும்!

நாடாளுமன்ற விவாதங்களில் ஜனாதிபதி பங்கேற்க வேண்டும்!

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நடைபெற்றுவரும் நாடாளுமன்ற விவாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி விவாதத்தில் பங்கேற்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மன்றில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

”இந்த நாடாளுமன்றில் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரொருவர் இருக்கிறார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு மிகவும் குறைந்த அளவிலான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளன.

இது மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான விவகாரமாகும். ஜனாதிபதிதான் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சராகும்.

எனவே, ஜனாதிபதி நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். எமக்கு ஜனாதிபதியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் இருக்கின்றன. பாதுகாப்பு அமைச்சர் இல்லாது இது தொடர்பிலான விவாதத்தை மேற்கொள்ள முடியாது.

மக்களுக்கு நாட்டின் நிலைமையை வெளிப்படுத்த வேண்டுமெனில், அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.