குளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்!

வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் இன்று (07) காலை 11.00 மணியளவில் குளவிகொட்டுக்கு இலக்காகி ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாடசாலையின் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குளவிக்கூடு காற்றினால் கலைந்து ஆசிரியர் மற்றும் மாணவர்களை தாக்கியதில் ஒரு ஆசிரியர் , மூன்று மாணவர்கள் சிதம்பரபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

இதனையடுத்து பாடசாலை மாணவர்களை அதிபர், ஆசிரியர்களின் உதவியுடன் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டதுடன் 11.00 மணியுடன் பாடசாலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.