வவுனியாவில் வர்தகநிலையத்தில் தீ!

வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தினால் இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு குறித்த வர்த்தக நிலையம் திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.எனினும் தீயணைப்பு பிரிவினர்,பொலிஸார் மற்றும் அப்பகுதியில் நின்றிருந்தவர்களின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், ஏனைய வர்த்தக நிலையங்களிற்கும் தீ பரவாமல் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கபட்டிருந்தது.

மின் ஒழுக்கே தீவிபத்திற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவளை தீ விபத்து இடம்பெற்ற வர்த்தக நிலையத்தில் இருந்து ட்ரோன் கமரா ஒன்று பாதுகாப்புத்தரப்பினரால் மீட்க்கபட்டிருந்தது.

குறித்த கமரா விற்பனைக்காக வைக்கபட்டிருந்ததாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.