தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே!

தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சுமத்தினார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இவர், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார்.

இதன்போது, மூப்பனாருக்கு பிரதமராவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்தாதாக குறிப்பிட்ட அவர், இதனைத் தடுத்தது திராவிட முன்னேற்றக் கழகமே எனக் குறிப்பிட்டார்.

அதேபோல் டாக்டர் அப்துல் கலாமும் மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுத்ததும் தி.மு.க.வே என அவர் குற்றஞ்சாட்டினார்.