பல்லாயிரம் படுகொலைகள், இழப்புக்கள், தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் தொடர்பில் சேனாதிராஜா ஒரு மணிநேரம் நேரடி விவாதத்திற்கு வருமாறு ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குற்றம்சாட்டுகின்றார்.

கிளிநொச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பில் ஊடக அறிக்கைகளை விடுபவர்கள் இதய சுத்தியுடன் அவர்களிற்கு உதவ முன்வரவில்லை எனவும், அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேட முற்படுவதாகவும் ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களை வைத்து அரசியல் செய்தவர்கள் தொடர்பிலும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இடம்பெற்ற படுகொலைகள், துரோகங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நேரடி விவாத்திற்கு வருமாறும் ஆனந்தசங்கரி மாவை சேனாதிராஜா, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.