ISIS தீவிரவாதிகளுக்கும் முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் ஆளுனர்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் இவ் நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு(தமிழரசுக்கட்சி,ரெலோ,புளெட்)றிசாட் பதியுதீனையும் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா மற்றும் மேல்மாகாண ஆளுனர் அசாத்சாலியையும் பாதுகாத்து வருகின்றனர்.
இவ்விடயத்தை கூட்டமைப்பு மறுக்குமாக இருந்தால் கூட்டமைப்பின் பதின்நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்ககையில்லா பிரேரணையை கொண்டுவர முடியுமா? அவ்வாறு கொண்டுவரப்படும் பட்சத்தில் வடக்கு,கிழக்கு,மலையக மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு றிசாட் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
ஆனால் இவற்றை செய்யாமல் அடுத்துவரும் ஜனாதிபதி,பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு,சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும்; கூட்டாக இணைந்து ஆட்சி அமைப்பதுதான் இவர்களது பிரதானமான நோக்கமாக காணப்படுகிறது இதற்கு நலலொரு உதாரணம் சிறிதரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் முஸ்லீம் அமைச்சர்கள் மீதும் முஸ்லீம் கட்சிகள் மீதும் வீணான பழிகளை சுமத்த வேண்டாம் எனக் கூறியிருந்தார். இதனுடைய உள்நோக்கம் இவ் நான்கு கட்சிகளுக்குமிடையிலான ஒற்றுமை குலைந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றனர என்பது தெளிவகின்றது.
மேலும் ஆளும் அரசாங்கத்தின் மிக முக்கிய பங்காளிகளாக காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதின்நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கமுடியும்.உங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவிட்டால் அரசுக்கு வழங்கும் ஆதவை விலக்கி கொள்ளப்போகின்றோம் என ஊடகங்களில் விளம்பரம் தேடாமல் நிஜமாக செய்து காட்ட முடியுமா?
கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசுவது இவர்களது இரட்டை வேடத்தை மிக துல்லியமாக காட்டுகின்றது.இவ்வாறான நிலைப்பாடு ஜஸ்ஜஸ் தீவிரவாதிகளையும் அவர்களுக்கு துணைபோன அரசியல்வாதிகளையும் காப்பாற்றி கூட்டமைப்பின் எதிர்கால தேர்தல் அரசியலை முன்னிறுத்தி றிசாட் பதியுதீன்,ஹிஸ்புல்லா அசாத்சாலி இவர்களை 2020ல் ரணில் அரசாங்கத்தோடு கூட்டுசேர்த்து அமைச்சுப்பதவிகளையும் சலுகைகைளையும் பெற்றுக்கொள்வதுதான் இவர்களது உன்மையான உள்நோக்கமாகும். இதை மறுப்பவர்கள் றிசாட்டுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரமுடியுமா?