மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ் நகரப்பகுதியில் இருந்து சென்ற இவ்விரு மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகின.

இச்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இவ்வீதியில் பல்சர் ரக மோட்டார் சைக்களில் இரு இளைஞர்களும் மற்றுமொரு வண்டியான சலி மோட்டார் சைக்கிளில் ஐயர் ஒருவரும் போட்டி போட்டு கொண்டு யாழில் இருந்து அராலி பகுதியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது சிறிது நேரத்தில் ஐயரது மோட்டார் சைக்கிளின் ரியூப் திடிரென வெடித்துள்ளது.

இதன்போது அருகில் போட்டி போட்டு சமாந்தரமாக பயணித்த இளைஞர்களது மோட்டார் வண்டியுடன் மோதவே பெரும் சத்தத்துடன் அப்பகுதியில் விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்ட ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இச்சத்தத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இம்மூவரும் சுமார் ஒரு மணித்தியாலமாக வீதியில் இரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து பொதுமக்கள் சிலரால் தொடர்ந்து பொதுமக்கள் சிலரால் பொலிஸாரோ,அம்புலன்ஸ் வண்டியோ அழைத்தும் அவ்விடம் வந்து சேரவில்லை.

விபத்து நடைபெற்ற பகுதியில் மதுபான போத்தல்கள் சிதறி காணப்பட்டது.
இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த இளைஞர் குழு காயமடைந்து கிடந்த இளைஞர்கள் மற்றும் குற்றுயிராக கிடந்த ஐயரையும் தூக்கி யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.