நல்லாட்சியிலேயே பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன

நல்லாட்சியிலேயே பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உடகணுகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்றையதினம் (சனிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிதியமைச்சர் எவ்வகையான கௌரவம், மரியாதைகளை பெற்றாலும் மக்களுக்கு இந்த நல்லாட்சியானது தொடர்ந்தும் கஷ்டம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. பண்டிகைக் காலத்தில் கூட மக்களின் அத்தியவசியப் பொருட்களுக்கான விலைகளைக் குறைக்கவில்லை.

அத்துடன் அரசாங்கத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சில நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படுவதில்லை” என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.