அட்லீக்கு விஜய் விதித்த கடும் கண்டிஷன்

இளைய தளபதியின் தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் எல்லோரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், படக்குழு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.
இதுக்குறித்து மனம் திறந்த அட்லீ ‘இப்படம் திடிரென்று ஆரம்பிக்கவில்லை, ராஜா ராணி முடிந்தவுடன் விஜய் சாரை சந்தித்தேன்.

அதன் பின் மூன்று முறை அவரை சந்தித்து கதை கூறினேன். இப்படம் ஆரம்பிக்கும் போதே விஜய் சார் ஒரு கண்டிஷன் விதித்தார்.
இப்படத்தை எல்லோரும் குடும்பம் குடும்பமாக பார்க்க வேண்டும் என்றார், அவர் கூறியது போல் கண்டிப்பாக இப்படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவரும்’ என கூறியுள்ளார்.