சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் வேதாளம். மேலும் அஜித் இதுவரை நடித்த படங்களிலேய அதிக வசூல் செய்த படமாக வேதாளம் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கன மழையால் வேதாளம் படத்தின் வசூல் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. திரையரங்குகள் முழுவதும் தண்ணீரில் சூழ்ந்துள்ளது. மேலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. எனவே திரையரங்குகளில் மக்களை தற்போது அடைக்களம் கொடுத்து தங்க வைக்கபட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் தற்போது பட காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யபட்டுள்ளது. இதனால் வேதாளம் படத்தின் வசூல் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

விஜய்யின் கத்தி படம் சென்னயில் மட்டும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 7 கோடியை அள்ளியது. ஆனால் அஜித்தின் வேதாளம் படம் இன்னும் கத்தி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை நெருங்க கூட முடியவில்லை