ரஜினி, விஜய்யை தவிர, வேறு யார் தான் அப்படி பேசவில்லை? ராதிகா அதிரடி

நடிகர் சங்க தோல்வியிலிருந்து சரத்குமார், ராதிகா ஆகியோர் தற்போது மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் ராதிகா, சிம்புவின் பீப் சாங்கிற்கு சில அதிரடி கருத்துக்களை கூறினார்.
இதில் இவர் கூறுகையில் ‘சிம்பு பாடிய பாடல் தவறு தான், ஆனால், அதற்காக அவரை இப்படி குறை சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.
அவரை ஏதோ தீவிரவாதி போல் நடத்த வேண்டாம்.

மேலும், எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்யை தவிர மற்ற எல்லா நடிகர்களும் கெட்ட வார்த்தை பேசியுள்ளனர்’ என்று கூறியுள்ளார்