வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடிசந்தியில் இன்று (26.12.2015) மாலை 02.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரையும்; வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

விடுமுறையின் நிமித்தம் கொழும்பில் இருந்து பாசிக்குடாவிற்கு வந்து மீண்டும் கொழும்பு பயணித்த குடும்ப உறுப்பினர்கள் பயணித்த வேன் துவிச்சக்கர வண்டியில் வியாபாரத்திற்காக விறகு ஏற்றி வந்த குடும்பஸ்தர் மீது மோதியதனாலயே இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக வாழைச்சேனை மோட்டார் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த தேவாலய வீதி முறக்கட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான் வைரமுத்து (வயது – 52) என்பவர் மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ள்ளதுடன் வேனில் பயணித்தவர்களில் காயமடைந்த ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேனின் சாரதி வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து சம்பவம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ac-5

ac-6

ac-1

ac-2

ac