தாயகம் திரும்பும் 74 இலங்கையர்கள்

இந்திய முகாம்களில் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருந்த இலங்கையர்கள் இந்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 20 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் எதிர்வரும் 27ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 16 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் அடங்கிய மற்றுமொரு குழுவினர் எதிர்வரும் 28ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் பல வருடங்களாக காலம் கழித்து வந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பவுள்ளர் என கூறப்பட்டுள்ளது.

நாடு திரும்பும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் உணவு ஆகிய செலவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.