தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் கூட்டணி என்று ஒரு சிலர் இருப்பார்கள்.
அந்த வகையில் அவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் சில கருத்து மோதல்களால் பிரிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இதில் மணிரத்னம்-இளையராஜா, செல்வராகவன்-யுவன், கௌதம் மேனன்- ஹாரிஸ் போன்ற பல கூட்டணி உடைந்துள்ளது.

இதில் கௌதம், ஹாரிஸ் மட்டுமே மீண்டும் இணைந்தனர்.இந்நிலையில் இதேபோல் 3, மாரி, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தது தனுஷ்-அனிருத் கூட்டணி. ஆனால், இந்த கூட்டணி தற்போது உடையவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணமாக அனிருத் மற்ற நடிகர்களின் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டராம். இதனால், முன்பு போல் தனுஷ் படத்திற்கு கேட்ட நேரத்தில் பாடல்களை கொடுப்பதில்லையாம்.
இதன் காரணமாகவே கூட்டணி உடைகிறது என கூறப்படுகின்றது.ஆனால், தனுஷ் அடுத்து நடிக்கும் கொடி படத்திற்கு அனிருத் தான் இசை என கூறப்பட்டுள்ளது.

இந்த கிசுகிசுக்களை தனுஷ்-அனிருத் உண்மையாக்குவார்களா? இல்லை பொய்யாக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.