தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பூரண ஆளுகைக்குட்பட்ட வவுனியா நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா நகர பேருந்து நிலயம் குப்பை கூழங்கள் நிறைந்து காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.

மாதாந்தம் பல இலட்சங்களை வாடகையாகவும்,தொழில் அனுமதிப் பத்திரம்,சோலவரி போன்றவையாகச் செலுத்துவதுடன் நகர மக்களின் ஒரே ஒரு பேரூந்து தரிப்பிடம் இவ்வாறு அழுக்காகவும் துர்நாற்றத்துடனும் காணப்படுவதுடன்,இரவு நேர 6-7 மணி இறுதி பூவரசங்குளம்,செட்டிகுளம் செல்லும் பேரூந்துகளில் காதல் காம களியாட்டங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளன.

இதுமட்டுமன்றி வவுனியா சுகாதாரப் பிரிவால் வெளியிடப்பட்ட 8 டெங்கு அச்சுறுத்தல் வலயங்களும் இவ் நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது.

அதுமட்டுமன்றி வவுனியா நகரசபையைச் சூழ்ந்துள்ள கால்வாய்களில் மிக அதிகளவான நுளம்புகளும் பெருகிவருகின்ற போதிலும் அதனைக் கட்டுப்படுத்தாது,கட்டாக்காலி மாடுகளினை ஊழியர்கள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதுடன் மறைமுகமான இலஞ்ச வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவே ஒப்படைத்தால் தமக்கு 1000.00

இல்லாதுவிடின் பகலில் நகரசபைக்கு 2000.00

முதலில் குளம் மற்றும் அதன் அருகில் இருக்கும் மேய்ச்சல் தரைகளில் அத்துமீறிக் குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுங்கள்.அதன்பின்னர் மாடுகளை பிடியுங்கள்.

புதிதாக பதவியேற்றுள்ள செயலாளருக்கு சட்டமும் தெரியும்,மனிதாபிமானமும் தெரியும் என நினைக்கின்றோம்.அதுமட்டுமன்றி மேலே கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம்.

Vauneja-01

Vauneja-02

Vauneja-03

Vauneja