இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த சிறுவன் பலி

திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Kottapattu இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த ரோஹித் என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருச்சி சுப்ரமணியப்புரம் தனியார் பாடசாலையில் கல்விப் பயிலும் குறித்த சிறுவன், சக நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம், அரசாங்க வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கே.கே நகர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.