பீப் பாடல் விவகாரம் காணாமல் போய் சிம்பு பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன.

அண்மையில் அவர் திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் சிம்பு, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை மெல்லிசை படம் மற்றும் ஆக்கோ ஆல்பம் ஆகியவற்றை தயாரித்த ரேபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.

சிம்பு மூன்று வேடத்தில் நடிக்க போகிறார் என்று கூறப்படும் இப்படம் மொத்தம் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறதாம்.

இந்த படத்தை வருகிற மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது.இச்செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.