ஜெர்மனியில் பல்லின மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தினம்

உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் பல நகரங்களில் தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பேரணிகளில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமிழின அழிப்புக்கு நீதி கோரும் வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பதாதைகளை தாங்கியவண்ணம், ஜெர்மன் மொழியில் துண்டுப்பிரசுரங்களை வழங்கி பல்லின சமூகத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், ஒரு சில நகரங்களில் தாயக உறவுகளின் வாழ்வாதாரத்துக்காக தமிழீழ உணவக நிலையங்கள் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.