இலங்கையில் அரசியல் முன்னேற்றமாக, கூட்டு எதிர்க்கட்சியினால் ஆரம்பிக்கப்படும் புதிய கட்சியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கம் வகிக்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து கூட்டு எதிர்க்கட்சியினால் ஆரம்பிக்கப்படவுள்ள புதியக்கட்சி யோசனையும் கிடப்பில் போடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொழும்பு அரசியல் தரப்பை கோடிட்டு ஆங்கில செய்தித்தாளின் ஆசிரியர் தலையங்கம் இதனைக்குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் தொடர்ந்தும் விளக்கமறியல் தண்டனைகளை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாமலையும் ஷிரந்தியையும் கைது செய்வார்கள்: மகிந்த

மகனையும் மனைவியையும் கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாமலும் கைது செய்யப்படுவார். ஷிரந்தியும் கைது செய்யப்படுவார். அடுத்தது என்னை கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பாக முக்கியமான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சாட்சியங்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவதற்காக நாமல் ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்படவிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.