சற்று முன் யாழ்ப்பாணத்தைப் தாக்கத் தொடங்கிய புயல்…! எச்சரிக்கை அறிவிப்பு…

jaffna01-1

யாழ்ப்பாணம் கரவெட்டி அல்வாய் பகுதியில் இன்று மாலை 4.15 அளவில் மினி சூறவாளி தாக்கியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை மற்றும் காற்றினைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை J 378 பிரிவைச் சேர்ந்த அல்வாய் பகுதியில் மினி சூறாவளி தாக்கியுள்ளது.

இந்த மினி சூறாவளியினால் 12 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், பொது மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.