இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள்!

இலங்கைக்கு தாங்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் , 119 முகாம்களில், 67 ஆயிரம் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகளவானவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது.

இதேவேளை, தமிழக காவல்த்துறையினரின் அனுமதியுடன் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிமிர்த்தமாக வெவ்வேறு இடங்களில் உள்ளனர்.

கடந்த 2009 மே மாதம், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், ஒரே சமயத்தில், 5,000 பேர் இலங்கைக்கு சென்றனர். இந்நிலையிலேயே வேலைவாய்ப்பு தற்போது, இலங்கையில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும், அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதாலும், தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல, அகதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மைய நாட்களாக இலங்கைக்கு செல்வதற்கு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் கவனம் ஆர்வம் காட்டிவருவதாக அகதி முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 119 முகாம்களில், 67 ஆயிரம் பேர் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.