ven-kal-stone

சிறுகோள் ஒன்று பூமி மீது மணிக்கு 60,000 கி.மீ., வேகத்தில் மோதினால் அது கடலில் விழுந்தாலும் உலகம் முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும் என்று விஞ்ஞானிகள் கணித்து தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற ஒரு அழிவில் தான் டைனோசர் இனம் அழிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் 10 மைல் விட்டம் கொண்ட 2009 இ.எஸ்., என்று பெயரிடப்பட்ட ஒரு சிறுகோள் ஒன்று பூமி மீது சில ஆண்டுகளில் மோத வாய்ப்பு உள்ளதாக சீன வானவியலாளர் தெரிவித்துள்ளார், இது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தி ஈடானது எனவும் எச்சரித்துள்ளார்.

இந்த வகையான சிறு கோள்களை ஆராய்வதற்காக பென்னு என்ற சிறுகோளுக்கு விண்கலத்தை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.