யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அவர்களின் இழப்புக்கு நீதி கோரியும் இன்று இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 20 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர் . குறித்த சம்பவத்தை கண்டித்து மாணவர்களுக்கு நீதி வேண்டி தமிழர் வாழும் தேசம் எங்கும் பல்வேறு கவனயீர்ப்பு ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் நாடுகடத்த தமிழீழ அரசினாலும் இலண்டனில் உள்ள பல்வேறு அமைப்புக்களினாலும் இலங்கை தூதரகத்துக்கு முன்னால் இன்று காலை 11 மணியில் இருந்து 4 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பொ.கிறிஸ்ரிராஜ் கருத்து தெரிவிக்கையில், மாணவர்களை பகொலை செய்வது இலங்கை அரசின் முட்டாள்தனம் என்றும் முன்னர் இராணுவத்தை வைத்து தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் தற்போது பொலிஸாருக்கு துப்பாக்கியை கொடுத்து அப்பாவி இளைஞர்களை கொல்கிறார்கள். இந்த நிலை தொடருமாக இருந்தால் இலங்கை அரசு மாபெரும் போராட்டம் எதிர்கொள்ள வேண்டி வரும் இவர்கள் இது போன்ற காட்டு மிராண்டிதனமான வேலைகளைச் செய்து மக்களை சீண்டாமல் இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். இதில் மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு பல்லாயிரக்கணக்கானோர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

image-0-02-04-9d4943c01a9be8da7b78dbb13caf3f8eaac244b811903e0efa001b436843ff51-v dsc_0526 dsc_0512 image-0-02-04-c0fa74f27ebd151f1b6dd80250abc02cf30d27073adc9ed93fe4065d2cc80357-v img-20161025-wa0000