இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. திறைசேரியும் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் முறையற்ற நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார கொள்கை காரணமாக இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மஹிந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பெருந்தொகை கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாமல் சமகால அரசாங்கம் திண்டாடுகிறது.

இந்நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையத்திற்காக சீனாவிற்கு செலுத்த வேண்டிய பாரிய கடன் பணத்தை செலுத்தாமல் விடுவதற்கான வாய்ப்பொன்று கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த இரு திட்டங்களுக்காக இலங்கை தொடர்ந்து சீனாவுக்கு செலுத்த வேண்டிய பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலாக சீனா மற்றும் இலங்கை இணைந்து உருவாக்கும் நிறுவனம் ஊடாக ஹம்பாந்தோட்டை மற்றும் மத்தல விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து நிர்வாகம் செய்யவுள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு மேலதிகமாக கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கவுள்ளது.

அதற்கமைய இலங்கை சர்வதேசத்திற்கு செலுத்த வேண்டிய கடன் பணத்தில் பாரிய பங்கு குறைவடைகின்றதென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.