Karthika-Nair-Hot-New-Stills-14640

விபத்தில் உறவினர்களை இழந்ததால் ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக புதிய அமைப்பு தொடங்கியுள்ளேன் என்று நடிகை கார்த்திகா கூறினார்.

ராதா மகள்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த பழைய நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. இவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். ‘கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

கார்த்திகா இப்போது ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதிய அமைப்பு தொடங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, எல்லோரும் ஹெல்மெட் அணிய தொடங்கியுள்ளனர்

விழிப்புணர்வு

கட்டாய ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருவனந்தபுரத்தில் ‘ஆபரேஷன் ஹெல்மெட்’ என்ற அமைப்பை கார்த்திகா தொடங்கியுள்ளார்.

இந்த அமைப்பு குறித்து நடிகை கார்த்திகா கூறியதாவது:-

எனது உறவினர்கள் பலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். இதுபோல் எனது பணியாளர்கள் சிலரும் ஹெல்மெட் அணியாமல் இறந்து இருக்கிறார்கள். எனவேதான் சமூக அக்கறையுடன் ‘ஆபரேஷன் ஹெல்மெட்’ அமைப்பை தொடங்கியுள்ளேன்.

வற்புறுத்தல்

இதன் மூலம் மக்களை நேரில் சந்தித்து ஹெல்மெட் அவசியத்தை எடுத்து சொல்வோம். பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் கொடுத்து ஹெல்மெட் அணிய வற்புறுத்துவோம்.

இவ்வாறு கார்த்திகா கூறினார்