இலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி!

சந்தையில் மீன்களின் விலை சடுதியாக சரிவடைந்துள்ளன.

இலங்கை கடற்பரப்பில் அதிக அளவான மீன்கள் பிடிபடுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் பேலியகொடை மீன் மொத்த சந்தைக்கு பாரிய அளவான மீன்கள் கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களின் பின்னர் இவ்வாறு அதிக அளவான மீன்கள் பிடிபடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.