இராணுவ புலனாய்வு பிரிவிற்கு புதிய பணிப்பாளராக பிரிகேடியர் விஜேந்திர குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் வருடாந்த இடமாற்ற செயல்முறைக்கு அமைவாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் , இதுவரை இந்த பதவியில் பணியாற்றிய பிரிகேடியர் சுரேஸ் சலே புலனாய்வு பிரிவின் ரெஜிமென்டல் தலைமையகத்திற்கு இணைக்கப்பட்டுள்ளார்.