பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் – அதிரடி நடவடிக்கையில் தெரேசா மே..

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா நிரந்தரமாக விலகுவது தொடர்பில் புதிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ள நிலையில், தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் விலக வேண்டும் என தெரிவித்து அந்நாட்டு மக்கள் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து பிரித்தானியாவின் முன்னாள் பிராதமர் டேவிட் கெமரூன் பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராக தெரேசா மே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா இரண்டு ஆண்டுகளில் விலகுவதற்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கியுள்ளது. சட்டப்பிரிவு 50 இன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகி செல்ல உத்தரவிட பிரதமருக்கு அதிகாரம் கிடையாது.

அதனை நடைமுறைப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுமதியை பிரதமர் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின் காரணமாக அந்நாட்டில் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பிரதமருக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்காது போனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச்செல்வது சற்று கடினமானது என தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதேவேளை, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யவுள்ளதாகவும், அது தொடர்பிலான அதிரடி நடவடிக்கையில் பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.