முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தந்திரோபயங்களை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டரம்ப் பின்பற்றுவதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டரம்ப் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் திகதி புளோரிடா மாநிலத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ட்ரம்ப் ஈடுபட்டார்.

இதன்போது பிரச்சார மேடையின் அருகிலிருந்த குழந்தை ஒன்றை ட்ரம்ப் தூக்கி முத்தம் கொடுக்கும் சம்பவம் ஒன்று கமராவில் பதிவாகியிருந்தன.

இந்த காட்சியை பார்க்கும் போது டொனால்ட் ட்ரம்ப், மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தந்திரங்களை பின்பற்றுவதாக எண்ணத் தோன்றுவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்களின்பு நாளையதினம் இடம்பெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலரி கிளின்டனும், குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டித்தன்மை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.