அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களைக் கைப்பற்றி குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாகவே இருந்தன.

அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவும் ஹிலாரிக்கு ஆதரவாகவே பிரசாரம் செய்து வந்தார். இதனால் ஹிலாரியே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கருத்துக்கணிப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 ஓட்டுக்கள் தேவை. இந்நிலையில் டிரம்ப் 276 ஓட்டுக்கள் பெற்றார். இதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல் முறையாகும்.

அதிபர் தேர்தலில் பெண்களும், இளைஞர்களும் ஹிலாரி அதிக அளவில் ஓட்டுக்கள் அளித்திருந்த போதிலும் 218 ஓட்டுக்களை மட்டுமே அவர் பெற்றிருந்தார்.

img-20161109-wa0010 img-20161109-wa0009