பிரித்தானிய நாட்டின் அரசியல்வாதியான டேவிட் கமரூன் 1966 ஆம் வருடம் அக்டோபர் 9ஆம் திகதி லண்டனில் பிறந்தார்.

நான்காம் வில்லியம் அரசரின் வம்சாவளியை சேர்ந்த டேவிட் கமரூன் சிறு வயதிலிருந்தே படிப்பில் கெட்டிகாரராக விளங்கினார்.

டேவிட்டின் தந்தை லான் பங்குதரகராகவும், தாய் மேரி சமாதான நீதிபதியாகவும் இருந்தார்கள்.

பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்த கமரூன் 1988 ஆம் ஆண்டு பிலாசபி, அரசியல், பொருளாதாரம் பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

பின்னர் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆராய்ச்சி பிரிவில் வேலை பார்த்த கமரூன் பின்னர் அந்நாட்டின் உள்துறை செயலாளர் மைக்கேல் அவார்ட்டிடம் செய்தி துறை சம்மந்தமான பணியில் சேந்தார்.