நாட்டில் பெய்த அடைமழை காரணமாக மற்றுமொரு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் நீர் மற்றும் உணவு மூலம் நோய் பரவும் ஆபத்துக்கள் அதிகமாக காணப்படுவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பொது மக்கள் குடிநீர் தொடர்பில் இந்த நாட்களில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது குடிப்பதற்கு பயன்படுத்தும் நீரை சூடாக்கிய பின்னரே அருந்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் வருண குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அனர்த்த்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதலில் அடைக்கப்பட்ட நீரை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.