இலங்கையில் இடம்பெற்ற பாரிய வெள்ளத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மண் சரிவு ஒன்றில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை குறித்த ஐவரின் இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவர், மனைவி மற்றும் இளம் பிள்ளைகள் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஐவரும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளனர்.எனினும் இந்த குடும்பத்தின் மூத்த மகன் மாத்திரம் இந்த வெள்ளத்தின் போது உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற போது அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.