ஈழ அகதிகள் முகாமில் ஆயுததாரிகளா? விஷேட கண்காணிப்பிற்கு உத்தரவு

தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளின் முகாம்களில் ஆயுததாரிகள் தங்கியிருந்து தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகதிகளின் முகாம்களை விஷேட கண்காணிப்பதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும் பொலிஸார் பணியில் ஈடுபடுடத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அகதிகள் என்ற பெயரில் ஆயுததாரிகள் முகாம்களில் தங்கியிருந்து நாசகார செயல்களில் ஈடுபட முடியும் என புலனாய்வு துறையினர் மத்திய அரசாங்கத்திற்கு இரகசிய தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, ஈழ அகதிகளை கண்காணிப்பதற்கு மத்திய அரசில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்காக தனி பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஈழ தமிழர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.