யாழ்ப்பாணம் – பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞன் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டமைக்கான ஆவணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரவிச்சந்திரன் நிதுஷன் என்ற இளைஞர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் குடா நாட்டில் ஆயுத குழுக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரால் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.