நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் எவ்வித அர்த்தமும் அற்றது என முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்திருந்தது.

இந்த நாட்டில் அரசியல் என்பது பொய், கண்கட்டி வித்தை மற்றும் மோசடி என்றே கூற வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலை குறைப்பினால் சாதாரண குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு 250 ரூபாவினால் மட்டுமே குறையும்.

சமூகத்தில் அரசாங்கத்தின் மீது எழுந்து வரும் கடுமையான எதிர்ப்புக்ளை சமாளிக்கும் நோக்கிலேயே சிறிதளவிலேனும் பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது.

பொருளாதாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வர மக்கள் முன் வர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.