1000 ரூபாய் சம்பள அதிகரிப்புடன் சம்பள நிலுவையும் தர வேண்டும் என தொழிலாளர்கள் போராடிக்கொண்டிருக்க,மறுபுறம் தேயிலை துறைக்கு என்ன நேர்ந்துள்ளது என தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் அறிக்கையொன்றை வழங்கியுள்ளது.
தேயிலை துறையில் பெருந்தோட்டம் மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டு துறைகள் காணப்படுகின்றன.அவற்றில் பெருந்தோட்ட துறைமிக அதிகமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது, 70 வீதமான தேயிலை சிறு தோட்டங்கள் கையாளுகின்றன. கொள்கைகள் மூலம் அவர்களுக்கே அரசுசு முகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த துறையில் உள்ள ஏனையோர் பாதிப்பிற்குள்ளாக்குகின்றனர்.
ஏற்றுமதியாளர் சங்கமானது முற்றிலும் தனியார் நிறுவனங்கள் மூலமே இயங்குகிறது எத்தகைய சூழ்நிலையிலும் அரசு மூலம் மானியங்களோ அல்லது,நிதி ஒதுக்கீடுகளோ எமக்கு கிடைப்பதில்லை. மாறாக சேவைக்கட்டணம், வரி விதிப்புகள் மிக அதிகமாக அறவிடப்படும் பொருட்களில் ஒன்றாக தேயிலையை நிர்ணயித்துள்ளது.
இலங்கை தேயிலை துறை காலநிலை சார்ந்ததாகவே காணப்படுகின்றது.பொதுவாக வருடத்திற்கு 290 தொடக்கம் 340 மில்லியன் கிலோ கிராம் தேயிலை பறிக்கப்படும்.எனினும் வறட்சி காலங்களில் 280 மில்லியன் கிலோகிராமே பறிக்கப்படும்.இந்த தேயிலை ஏலத்தில் விடப்படும் பொழுது விலை நிர்ணயம் மற்றும் பல்வேறு முறைக்கேடுகள் நடைபெறுகின்றன. சுங்க திணைக்களத்தால் நுகர்விற்கு ஏற்றதல்ல என கண்டறியப்பட்டு கழிக்கப்படும் தேயிலை தூய தேயிலை என்ற பெயரில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விடும் இதனால் உண்மையான தேயிலை ஏற்றுமதியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இவற்றுக்கு தாராளமயமாக்கல் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டாலே இவ்வாறான சட்டவிரோத வர்த்தகத்தை தடுக்க முடியும் என தரமான தேயிலை ஏற்றுமதி செய்வோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கொள்கை மூலமாக டுபாய் நாடானது சர்வதேச தேயிலை சந்தையில் முன்னேறி வருவதோடு இலங்கைக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.மேலும் இலங்கையை மிஞ்சி விடவும் வாய்ப்பு உள்ளது.img_5620
வருடாந்தம் 7 பில்லியன் கிலோ கிராம் தேயிலை உலக சந்தைக்கு செல்கின்றது.மேலும் உற்பத்தி நாடுகள் 1.8 பில்லியன் தேயிலையினை தேயிலை மையங்களுக்கு அனுப்பி வைக்கின்றன.ஆனால் 15 வருடங்களுக்கு முன்னர் மொத்த தேயிலையில் 23 % த்தை அனுப்பி வைத்த இலங்கை இன்றைய நிலையில் வெறுமனே 17 % த்தை அனுப்பி வைக்கின்றது.தேயிலை சந்தையில் பல்வேறு நாட்டு தெரிவுகள் இருப்பதால் நுகர்வோர் இலங்கை தேயிலைக்கான கேள்வி மேலும் குறைவடைய வாய்ப்பு காணப்படுகின்றது. இதனை மீள் நிரப்ப வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.
எனவே அரசாங்கம் தற்போதைய சங்கட நிலையில் இருந்து மீள்வதற்கும் தொழிலாளர்கள் பாதுகாக்கவும் அரசாங்கம் மானியத்தினூடாக பங்களிப்பு செய்ய வேண்டும்.
2002 இல் தேயிலை ஏற்றுமதி வருமானம் 750 மில்லியன் – ,1.6 பில்லியன் வரையிலான தொகை என வரவு செலவு அறிக்கை சொல்கின்றது.எனினும் இன்று நிலைமை மோசமானவுடன் ஏற்றுமதி துறை மற்றும் தொழிலாளர்கள் நிலை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெருந்தோட்ட கம்பெனிகள் , உல்லாசத்துறை,கால்நடை வளர்ப்பு பாரிய அளவிலான பலம் மற்றும் காய்கறி வளர்ப்பு,மாற்று மின் உற்பத்தி செயற்திட்டம் போன்றவற்றை பன்முகப்படுத்த தவறியுள்ளது.ஏனைய நாடுகளில் 23 வீதமாக காணப்படும் உற்பத்தி செலவுகள் இலங்கையில் 70 % ஆக காணப்படுகின்றது.இந்த நிலை வர்த்தகத்திற்கு பொருத்தமானது அல்ல.ஆனால் இந்த விடயம் தவறான முறையில் விளங்கிக்கொள்ளப்படுகின்றது.
இன்றைய நிலையில் பாரம்பரிய தேயிலை ஏற்றுமதி துறையாக உள்ள இந்த துறை பலம் மிக்க துறையாக மாற்றமடைய வேண்டும்.சட்டவிரோத வர்த்தகர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 1957 இல் உருவாக்கப்பட்ட தேயிலை கட்டுப்பாட்டு சட்டம் தளர்த்தப்பட வேண்டும்,தேயிலை தோட்டங்கள் ஜப்பான் நாடு போன்ற உற்பத்தி முறைகளுக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும்.(நடுதல்,வளர்த்தல்,பராமரித்தல்,உற்பத்தி செய்தல் என்பவை உரிய காலத்திற்கேற்ப மேற்கொள்ளல்),கொழும்பு ஏல விற்பனையில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய முறையால் பல கொள்வனவாளர்கள் 2 3 நாட்கள் தனியறைகளில் கலந்துரையாடி ஏலத்தில் மோசடி செய்யும் நிலையை தவிர்க்க இலத்திரனியல் ஏல,முறைமையை கொண்டுவரவேண்டும்.லைன் லோகோ தேயிலை உற்பத்தியை அதிகரிக்க சிறு தோட்டங்கள் ஒத்துழைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் தேயிலை ஏற்றுமதி சங்கத்தால் உரிய தரப்புகளிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.

by jay

supported article from உதயசூரியன்