யாழ் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் ஆறாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 வருடங்களாக சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபடும் தம்மை நிரந்தரமாக்க கோரி கடந்த 07.11.2016 திங்கட்கிழமை முதல் பணி ப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடை பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முதற்கட்டமாக 30பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமெனவும்அடுத்த கட்டமாக மற்றய வர்களுக்கு வழங்கப்படுமெனவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தபோதிலும் அதனை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

அத்துடன் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பால் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும்- நகரின்மத்தியில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடம் சுத்தம் செய்யப்படாததாலும் நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயமான நிலை தோன்றலாம் என்ற செய்தி பரவி வருவதனால் பொதுமக்கள் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் நேரில் வந்து பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

fb_img_1479056848084