தளபதியை தாங்கி பிடித்த ரசிகர்கள்

vijay_fans006

இளைய தளபதியை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காதவர்கள் அவருடைய ரசிகர்கள்.

இதே நாளில் இரண்டு வருடத்திற்கு முன்பு தான் விஜய் நடித்த தலைவா படம் ரிலிஸானது.

ஆனால், சிலரின் சதி செயல்களால் அப்படம் சொன்ன தேதியில் தமிழகத்தில் வரவில்லை.

இதனால், இளைய தளபதி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அது மட்டுமின்றி விஜய்யும் மிகவும் மனமுடைந்து இருந்தார்.

எந்த நிலையிலும் இளைய தளபதியை விட்டு விலகாமல் அவரை தாங்கி பிடித்தனர் அவருடைய ரசிகர்கள்.

படம் தள்ளிப்போனாலும், கிட்டத்தட்ட ரூ 70 கோடி வரை இப்படம் வசூல் செய்தது.

இதை ஒரு விழாவில் கூட விஜய் ‘ஒரு படம் வந்து தோல்வி அடையாளாம், ஆனால், யாரோ தடுத்து ஓடி இருக்க வேண்டிய படம் தோல்வி அடைவது நியாயமே இல்லை’ என கோபமாகவே பேசினார்.