நாடு திரும்பினால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது? ஈழ அகதிகள்

இலங்கை திரும்புவது குறித்து தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் மத்தியில் இரட்டைநிலைப்பாடு உள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழ அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 107 அகதிகள் முகாம்களில், 64 ஆயிரத்து 208 அகதிகளும்,முகாம்களுக்கு வெளியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகளுமாக ஒரு லட்சத்துக்கும்அதிகமானவர்கள் வசிக்கின்றனர்.

அவர்களில் 40 சதவீதமானவர்கள் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருப்பதாக ஈழஅகதிகள் புனர்வாழ்வு மையத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய மக்கள், குறிப்பாக நீண்டகாலமாக தமிழகத்தில் தங்கியுள்ள மக்கள் நாடுதிரும்பவது குறித்து உறுதியானதொரு தீர்மானத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாடு திரும்பினால் தங்களுக்கான தொழில்வாய்ப்புகள், சொத்துக்களை மீளப்பெறல்,வாழ்வாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளதாககூறப்படுகிறது.

எனவே, நாடு திரும்புவதா?, இல்லையா? என்ற குழப்ப நிலை தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள்மத்தியில் தொடர்ந்தும் நிலவுவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.